search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனி மாவட்டம்"

    தேனி மாவட்டத்தில் மறுவாக்கு பதிவு நடைபெறும் இடங்களில் தண்டோரா மூலம் வாக்காளர்களுக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019

    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கம்மவார் சரசுவதி நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி எண் 67 மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடுகபட்டி சங்கர நாராயணன் நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி எண் 167 ஆகிய 2 வாக்கு சாவடிகளிலும் வருகிற 19ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பாராளுமன்ற தேர்தலுக்கும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் மறு வாக்கு பதிவு நடத்தப்பட உள்ளது.

    இந்த தேர்தல் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் அனைத்து வேட்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்த வாக்கு சாவடி பகுதிகளில் ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு தண்டோரா மூலம் அறிவிப்பு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மறுவாக்கு பதிவு நடப்பதை முன்னிட்டு ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் ஏற்கனவே பணியில் உள்ள பறக்கும் படை குழுக்களுடன், தலா 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 வாக்கு சாவடிகளிலும் மறுவாக்கு பதிவுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது.


    மறுவாக்கு பதிவு பகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணிலும், சி-விஜில் என்ற செல்போன் ஆப் மூலமாகவும் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார். #LokSabhaElections2019

    தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். #SSLC #SSLCResult
    தேனி:

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேனி மாவட்டத்தில் 8,104 மாணவர்களும், 7,754 மாணவிகளும் என மொத்தம் 15,858 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,404 மாணவர்கள், 7,424 மாணவிகள் என மொத்தம் 14,828 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.36 சதவீதமும், மாணவிகள் 95.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சவீதம் 93.50 ஆகும்.

    கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில், தேனி மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 97.10 சதவீதமும், 2018-ம் ஆண்டு 97.72 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 4 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.

    மாநில அளவில் தேனி மாவட்டம் 27-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் தேனி மாவட்டத்தில் 83 பள்ளிகளைச் சேர்ந்த 5,311 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4,775 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.91 சதவீதம் ஆகும். #SSLC #SSLCResult

    தேனி ஆண்டிப்பட்டியில் இயங்கி வந்த அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தகவல். #Andipatti #AMMK #Election2019 #ECRaid
    தேனி:

    ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.

    அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    மேலும் அவ்விடத்திற்கு கூடுதலாக காவலர்களும், அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர்.  அமமுக அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் வருமான சோதனை அதிகாரிகள் சோதனை செய்யதனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணம்  வைத்திருந்ததை வருமான வரித்துறையினர் கண்டறிந்து பணத்தை பறிமுதல் செய்தனர்

    வாக்காளர்களுக்கு ரூ.300 வீதம் பணம் பட்டு பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்த தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணத்தை பிரித்து ஒவ்வொருவருக்கும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



    அமமுக ஆதரவாளர்கள் கடையில் பணத்தை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் அமமுக ஆதரவாளர்கள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தொடர்ந்து அமமுக ஆதரவாளர்கள் கடையில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

    தேனி ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில்  நேற்று இரவு 8 மணி முதல் விடிய விடிய சுமார் 10 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் பணம் இருந்ததாக அதிகாரிகள் தகவல் அளித்தனர்.   மேலும் அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    தேனி ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் உள்ளே நுழைய முயன்ற போது அவர்களை தடுத்தது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக அமமுக மாவட்ட துணைச் செயலாளர் பழனி, சுமன்ராஜ், பிரகாஷ், மது ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    #Andipatti #AMMK #Election2019 #ECRaid
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர். #Andipatti #Election2019
    ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணம்  வைத்திருந்ததை வருமான வரித்துறையினர் கண்டறிந்து பணத்தை பறிமுதல் செய்தனர்

    வாக்காளர்களுக்கு ரூ.300 வீதம் பணம் பட்டு பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்த தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணத்தை பிரித்து ஒவ்வொருவருக்கும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அமமுக ஆதரவாளர்கள் கடையில் பணத்தை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் அமமுக ஆதரவாளர்கள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    தொடர்ந்து அமமுக ஆதரவாளர்கள் கடையில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பணம் எண்ணும் பணி நடைபெற்று வரகிறது. #Andipatti #Election2019
    தேனி மாவட்டத்தில் இருந்து பழனியில் தைப்பூச விழா பாதுகாப்பு பணிக்காக 387 போலீசார் சென்றுள்ளனர்.
    தேனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழா வருகின்ற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    திருவிழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்த பாதுகாப்பிற்காக தேனி மாவட்டத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 350 போலீசார் என மொத்தம் 387 பேர் தைப்பூச திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளனர்.

    கஜா புயல் எதிரொலியாக, தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் உத்தவிட்டுள்ளார். #Gaja #GajaCyclone
    தேனி:

    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது..

    கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை - வேதாரண்யம் இடையே காலை கரையைக் கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்த நிலையில், கஜா புயல் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளன.

    இந்நிலையில் கஜா புயல் பாதிப்பு காரணமாக தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்காலுக்கு மீட்பு பணிகளுக்காக கடற்படையை சேர்ந்த 2 கப்பல்கள் விரைந்துள்ளன. தர்ஷாக், கார்னிகோபார், கொராதிவ் ஆகிய கப்பல்கள் சென்னையில் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் சேதமடைந்த 29,500 மின்கம்பங்கள், 205 மின்மாற்றிகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Gaja #GajaCyclone
    தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.
    தேனி:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தேனி மாவட்டம் முழுவதும் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. நேற்றும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இன்றும் மழை பெய்தபடி இருந்தது. எனவே தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு வகுப்புகள் பள்ளிகளில் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

    கொடைக்கானல் மலை பகுதியிலும் கனமழை நீடித்து வருகிறது. எனவே இன்று கொடைக்கானல் தாலுகா அளவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் பிறப்பித்துள்ளார்.

    கனமழை பெய்து வருவதால் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. #HeavyRain #HolidayForSchools
    தேனி:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளப்பெருக்கு காரணமாக சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், வி.கே.புதூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.  #HeavyRain #HolidayForSchools

    தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் சோத்துப்பாறை அணை நிரம்பி உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் குளங்கள், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து கூடி வருகிறது. நேற்று பெரியகுளம், தேவதானப்பட்டி, கூடலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

    சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 127 அடியை எட்டியுள்ள நிலையில் தற்போது அணைக்கு 136 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 3 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.40 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 37.14 அடியாக உள்ளது.

    நீர்வரத்து 152 கன அடி. மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.40 அடி. வரத்து 15 கன அடி.

    பெரியாறு 10.8, தேக்கடி 17.2, கூடலூர் 9.8, சண்முகாநதி அணை 2, உத்தமபாளையம் 10.2, வைகை அணை 38.2, மஞ்சளாறு 14, சோத்துப்பாறை 16 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 97.72 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். #SSLCResult #TNResult
    தேனி:

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் 8,111 மாணவர்களும், 7,874 மாணவிளும் என 15,985 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 7,847 மாணவர்களும், 7,774 மாணவிகளும் என மொத்தம் 15,621 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 96.75 சதவீதமும், மாணவிகள் 98.73 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 97.72 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாநில அளவில் 6-வது இடமாகும்.

    தேனி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 96.57 சதவீதமும், கடந்த ஆண்டு 97.10 சதவீதம் மாணவ-மாணவிகளே தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு 97.72 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேனி மாவட்டத்தில் 81 அரசு பள்ளிகளை சேர்ந்த 5,199 மாணவர்களும், 5,067 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 97.46 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாவட்டத்தில் பார்வையற்ற 13 பேர், வாய்பேச இயலாத 17 பேர் உடல் ஊனமுற்ற 20 பேர், கண்பார்வையற்ற 13 பேர், காது கேளாத 17 பேர் என மாற்று திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் காதுகேளாத மாணவர்கள் 100 சதவீதமும், உடல் ஊனமுற்ற மாணவர்கள் 95 சதவீதமும், இதர மாணவர்கள் 100 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் தேர்வு முடிவுகள் அந்தந்த மாணவர்களின் செல்போனுக்கே குறுந்தகவலாக அனுப்பப்பட்டது. தரவரிசை பட்டியல் இல்லாமல் கிரேடு முறை அறிவிக்கப்பட்டதால் பள்ளிகளில் எவ்வித ஆரவாரம், கொண்டாட்டம் காணப்படவில்லை.

    பள்ளிகளிலும் குறைந்த அளவு மாணவர்களே வந்திருந்து தங்கள் தேர்வு முடிவுகளை பார்த்து சென்றனர். மாணவர்களின் உளவியல் பிரச்சனைக்கு இந்த மதிப்பெண் பட்டியல் வெளியீடு சிறந்த முறையில் இருப்பதாக பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். #SSLCResult #TNResult
    தேனி மாவட்டத்தில் மழை தொடர்வதால் வைகை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1¼ அடி உயர்ந்துள்ளது.

    கூடலூர்:

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அக்னிநட்சத்திரம் தொடங்கியதில் இருந்து காலை நேரங்களில் வெயில் கொளுத்துகிறது.

    மாலையில் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கோடை வெயிலை சமாளிக்க முடிகிறது.

    பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் சாரல்மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 473 கனஅடியாக உயர்ந்துள்ளது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து 902 கனஅடிநீர் வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் ஒரேநாளில் 1¼ அடி உயர்ந்து 35.99 அடியாக உள்ளது. 48 கனஅடிநீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 35.40 அடியாக உள்ளது. 25 கனஅடிநீர் வருகிறது. நீர்திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.50அடியாக உள்ளது. 80 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 2.8, தேக்கடி 5.4, கூடலூர் 1.4, உத்தமபாளையம் 1.2, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 5 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு கோடை மழை கைகொடுத்ததால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே மழை தொடரவேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

    ×